மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. நண்பன் கொலை

74பார்த்தது
மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. நண்பன் கொலை
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின் நட்பை துண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு ஓசூரிலிருந்து வீட்டிற்கு தெரியாமல் வந்துள்ளார். அப்போது சரவணனும் ரேவதியும் உடலுறவில் ஈடுபட்டிருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த காளிதாஸ், சரவணனை பீர் பாட்டிலால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். தகவலறிந்த காளிதாஸை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி