ரயில்களில் வெள்ளை பெட்ஷீட் வழங்கப்படுவது ஏன்?

79பார்த்தது
ரயில்களில் வெள்ளை பெட்ஷீட் வழங்கப்படுவது ஏன்?
இந்திய ரயில்வே தனது ஏசி பெட்டிகளில் ஏறும் பயணிகளுக்கு பெட்ஷீட், போர்வை மற்றும் தலையணையை வழங்குகிறது. இதில் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை நிறம் எப்போதும் வெண்மையாகவே இருக்கும். அது ஏன் என நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. அதாவது, பெட் ஷீட்களை துவைக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்தில் சலவைக்காக பெரிய கொதிகலன்கள் இருக்கும். இதில், 121 டிகிரி செல்சியஸில் உருவாகும் நீராவி பெட்சீட்டுகளை கழுவும். அவ்வாறு துவைக்கப்படும்போது கலர் துணிகள் இருந்தால் அதன் நிறம் மங்கிவிடும் அல்லது நிறங்கள் மாறி மாறி ஒட்டிக்கொள்ளும். அதனாலேயே வெள்ளை பெட்ஷீட் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி