தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதியில் மாற்றம்!

65பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதியில் மாற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20-ம் தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, "தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். மேலும், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் தாரகை கத்பர்ட்ற்கு நாளை காலை 11 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்" என அறிவித்துள்ளார். ஜூன் 24-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.