தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

52பார்த்தது
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜுலை 14) காலை 10 மணிக்குள் தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி