தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

22388பார்த்தது
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 14) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (ஏப்ரல் 15) தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 18, 19 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி