கோவை மாவட்டம் ஒத்தக்கால்மண்டபம் கிராமத்தில் புதிய பெட்ரோல் பங்க் அமைக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காததை எதிர்த்து அய்யாசாமி என்பவர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி புஷ்பா, ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து 50 மீட்டருக்குள் பெட்ரோல் பங்க் இருக்கக்கூடாது என்று வாரியம் கூறுகிறது. இது தொடர்பான தெளிவற்ற விதிகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்த உத்தரவிட்டார்.