நாம் தமிழர், திமுகவினரிடையே தள்ளுமுள்ளு

71பார்த்தது
நாகையில் சீமான் பரப்புரையின் போது, நாம் தமிழர் கட்சி, திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சீமான் பரப்புரையின் போது, தாரை தப்பட்டையுடன் திமுகவினர் ஊர்வலமாக தங்களது கூட்டணி கட்சியினருடன் சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர், திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட சென்ற திமுகவினருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சீமான் முன்னிலையில், நாம் தமிழர் கட்சியினர் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி