குமரி கடற்கரைக்கு செல்லவேண்டாம்.! ஆட்சியர் எச்சரிக்கை.!

61பார்த்தது
குமரி கடற்கரைக்கு செல்லவேண்டாம்.! ஆட்சியர் எச்சரிக்கை.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் (ஜூன் 10), நாளையும் (ஜூன் 11) அனைத்து கடற்கரையிலும் கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் திடீரென பலத்த காற்று வீசுவதோடு, கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களும், கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கன்னியாகுமரி ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார்.