உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்தில் சஹாரன்பூரில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் கோபால் யாதவின் ஆறு வயது மகன் புனித், நேற்று(ஜூன் 9) காலை தன்பூர் கிராமத்தில் காணாமல் போனார். மகனை கொடுக்க வேண்டும் என்றால் ரூ.50 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கடத்தல் காரர்கள் கடிதம் மூலம் கேட்டுள்ளனர். இது குறித்து கோபால் யாதவ் போலீசில் புகார் அளித்த நிலையில், இன்று (ஜூன் 10) கரும்பு தோட்டத்தில் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நிலத்தகராறில் ஏற்பட்ட முன்பகையே கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது.