உலக சுகாதார அமைப்பு, செல்போன் பயன்பாட்டுக்கும், மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தம் உள்ளதா? என அறிய ஆய்வு நடத்தியது. 10 நாடுகளைச் சேர்ந்த 11 ஆய்வாளர்கள் இதில் பங்கேற்றனர். அந்த ஆய்வின்படி, செல்போன் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற்போல், மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை. இதில் இருந்தே இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் செல்போன் பயன்படுத்துவதால் மூளை புற்றுநோய் ஏற்படாது என கண்டறியப்பட்டுள்ளது.