திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் தமிழன் என்பவரின் கட்டடத்தில், கடந்த 7-ம் தேதி இருவர் திருட வந்துள்ளனர். அவர்கள் சிசிடிவி கேமராவை கண்டவுடன் தலைதெறிக்க தப்பி ஓடிய காட்சி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இன்று அதிகாலை இதே கட்டடத்தில் கொள்ளையடிக்க ரம்பத்துடன் மற்றொருவர் வந்துள்ளார். அப்போது சிசிடிவியுடன் இணைக்கப்பட்டிருந்த சைரன் ஒலித்ததால், அவரும் தலைதெறிக்க ஓடியிருக்கிறார். இந்த சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.