சிபிஎஸ்இ: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

58பார்த்தது
சிபிஎஸ்இ: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?
10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ வாரிய முடிவுகள் மே 20 ஆம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ இணையதளம் cbseresults.nic.in தெரிவித்துள்ளது. இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகின்றன. இந்த போலி செய்திக்கு கண்டனம் தெரிவித்து சிபிஎஸ்இ வாரியம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி