நயினார் நாகேந்திரன் உறவினருக்கு சிபிசிஐடி சம்மன்

78பார்த்தது
நயினார் நாகேந்திரன் உறவினருக்கு சிபிசிஐடி சம்மன்
நெல்லை தொகுதி எம்எல்ஏவும், மக்களவை பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை தாம்பரம் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் விசாரணை வளையத்திற்குள் உள்ளார். இந்த சூழலில் முருகன் உள்ளிட்ட இருவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முருகனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி