ஆதீனத்தை மிரட்டிய வழக்கு- பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்!

78பார்த்தது
ஆதீனத்தை மிரட்டிய வழக்கு- பாஜக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆடியோ, வீடியோ வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் பாஜக நிர்வாகி அகோரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்த வழக்கில் பாஜக பிரமுகர்களான ஆடுதுறை வினோத், விக்னேஷ், குடியரசு, நிவாஸ் ஆகியோர் ஜாமீனில் வெளிவந்தனர். இந்நிலையில், அகோரத்துக்கும் நேற்று மயிலாடுதுறை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, திருச்சி சிறையில் இருந்து அவர் இன்று விடுதலையாகி உள்ளார்.

தொடர்புடைய செய்தி