இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்கிறார். ஆனால் மோடியின் அமைச்சரவையில் இரண்டு முக்கிய பாஜக பிரமுகர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அனுராக் தாக்கூர், புருஷோத்தம் ரூபாலா ஆகியோரை மோடி அமைச்சரவையில் சேர்க்கவில்லை எனத் கூறப்படுகிறது. இமாச்சல பிரதேச மாநில பாஜக தலைவர் பொறுப்பு அனுராக் தாக்கூருக்கு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜபுத்திரர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த புருஷோத்தம் ரூபாலாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.