கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சென்ற விசைப்படகு மீது சரக்கு கப்பல் ஒன்று மோதியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய அந்த சரக்கு கப்பல் அங்கிருந்து நிற்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதில், சேதமடைந்த விசைப்படகு கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கியது. அந்த படகில் பயணித்த மீனவர்கள் நீரில் தத்தளித்த நிலையில் அவர்களை மீட்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்த பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.