ட்ரெண்டிங்கில் "கேப்டன் மில்லர்" டீசர்

644பார்த்தது
ட்ரெண்டிங்கில் "கேப்டன் மில்லர்" டீசர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இப்படத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்த நாளான இன்று (ஜூன் 28) நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த டீசர் வெளியாகி இதுவரை 17 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வருகிற டிசம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

தொடர்புடைய செய்தி