கேப்டன் மில்லர் - டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

539பார்த்தது
கேப்டன் மில்லர் - டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர், தனுஷின் பிறந்தநாளான வரும் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி