விரைவில் ‘கேப்டன் மில்லர்’ டீசர்!

674பார்த்தது
விரைவில் ‘கேப்டன் மில்லர்’ டீசர்!
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தாங்கல் மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசரை வரும் 28ம் தேதி நள்ளிரவு 12.01க்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி