கனரா வங்கியில் தொழில்பழகுநர் நிலையிலான 3,000 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வேலையில் சேர விரும்புவோர் https:// corambank.com/ என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து ஆன்லைன் தேர்வு, மொழித்தேர்வு உள்ளிட்டவை நடத்தப்படும். இந்த வேலைவாய்ப்பில் தமிழகத்துக்கு மட்டும் 350 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.