இடைத்தேர்தல் - செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்!

72பார்த்தது
இடைத்தேர்தல் - செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜுன் 14) நடைபெறவுள்ளது. ஜுலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொகுதியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை விக்கிரவாணடி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில், தலைமைக்கழகத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. திமுக சார்பில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் விவசாய தொழிலாளர் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி