ரூ.25 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை

53பார்த்தது
ரூ.25 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை
நாமக்கல்: ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடந்த ஏலத்தில் ரூ.25 லட்சத்துக்கு மஞ்சள் வா்த்தகம் நடந்தது.
ஏலத்திற்கு விரலி ரகம் 170 மூட்டை, உருண்டை ரகம் 60 மூட்டை, பனங்காளி 20 மூட்டை என மொத்தம் 250 மூட்டைகள் ஏலத்திற்கு வந்தன. இந்த ஏலத்தில் விரலி குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ. 15 ஆயிரத்து 442 முதல் அதிகபட்சமாக ரூ.18 ஆயிரத்து 749 வரை விலை போனது.

உருண்டை குவிண்டால் ரூ.13 ஆயிரத்து 865 முதல் அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 502 வரை விலை போனது. பனங்காளி ரகம் குவிண்டால் ரூ.3,579 முதல் அதிகபட்சமாக ரூ.21 ஆயிரத்து 2 வரை விலை போனது. இதில் மொத்தம் ரூ.25 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை நடந்தது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி