பேருந்து விபத்து - 18 பேர் சம்பவ இடத்திலேயே பலி

588பார்த்தது
உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இன்று (ஜூலை 10) பயங்கர விபத்து நடந்தது. லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் பால் டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பீகாரில் இருந்து டெல்லிக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி