கட்டடம் இடிந்து விபத்து - பலி 10ஆக உயர்வு

67பார்த்தது
கட்டடம் இடிந்து விபத்து - பலி 10ஆக உயர்வு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் ஞாயிறு நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது. இதில் 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் காணாமல் போன இருவரை தேடும் பணியில் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி