காதுகளில் சேரும் அழுக்குகளை நீக்க பலரும் பட்ஸ் பயன்படுத்துவார்கள். பட்ஸை வைத்து காது குடைவது தொற்று ஏற்பட வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும். இதனால் மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது, தவறுதலாகச் செவிப்பறையில் `பட்ஸ்’ பட்டு கிழித்துவிட்டால் காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம்.