தமிழகத்தில் 4ஜி சேவை தொடங்க BSNL நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய BSNL மேலாளர் தமிழ்மணி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 15க்குள் 4ஜி சேவை தொடங்கப்படும். இதன் காரணமாக ஏற்கெனவே தமிழகத்தில் செயல்பாட்டில் இருக்கும் 6 ஆயிரம் BSNL டவர்கள் 3ஜி-யில் இருந்து 4ஜி-க்கு மாற்றப்படுகிறது என்றார். தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்கும் இந்த நிலையில், BSNL 4ஜி வழங்குவது ஏன் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.