திமுக- பாஜக இடையே கூட்டணி என்று கூறியுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்தை பொருட்டாக எடுக்கத் தேவையில்லை என காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் பதிலளித்துள்ளார். மேலும் அவர், “திமுக - காங்கிரஸ் கூட்டணி கொள்கை ரீதியாக வலுவான கூட்டணியாக உள்ளது. பாஜகவை எதிர்ப்பதற்கு எல்லா விதமான ஆயத்தங்களையும் கூட்டணியாக செய்துகொண்டே இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.