காதலித்த சகோதரியை கொலை செய்த சகோதரர்கள்

66பார்த்தது
காதலித்த சகோதரியை கொலை செய்த சகோதரர்கள்
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் சேதா கிராமம் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், காதலனுடன், சிறுமி நேற்று(மே 21) தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள் இருவரையும் காட்டுப்பகுதிக்குள் இழுத்து சென்று கோடாரியால் வெட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்து தப்பிச்சென்ற இளைஞர் கிராமத்தினரை கூட்டிவந்துள்ளார். ஆனால் சிறுமி கோடாரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியின் சகோதரர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி