வறுமையை ஒழிக்க தமிழக அரசு புதிய அதிரடி திட்டம்

60பார்த்தது
வறுமையை ஒழிக்க தமிழக அரசு புதிய அதிரடி திட்டம்
வறுமையை ஒழிக்கும் நோக்கில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் ”தாயுமானவர்” திட்டம் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் ஆதரவற்றோர், தனித்து வசிக்கும் முதியோர், பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பயனடைவர். கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை குடும்பங்களை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
Job Suitcase

Jobs near you