எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கொண்டுவந்த ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு 2023 மசோதாவை திரும்பப் பெற்றது ஒன்றிய அரசு. ஆலோசனைக்கு பிறகு திருத்தங்களுடன் கூடிய புதிய வரைவை முன்மொழிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் Content Creator-களை OTT மற்றும் டிஜிட்டல் தளங்களுடன் இணைத்து ஒழுங்குப்படுத்தும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டது.