கடலூர் அருகே வாழப்பட்டு பகுதியில் மளிகை கடையில் பிரிட்ஜ் வெடித்து விபத்துக்குள்ளானது. கடையின் உரிமையாளர் சண்முகம் இரவு கடையை மூடிக் கொண்டிருந்த போது, பிரிட்ஜ் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடை தரை மட்டமான நிலையில், கடை உரிமையாளர் சண்முகம், பொருள் வாங்க சென்ற ரவி ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். சண்முகம் கவலைக்கிடமாக உள்ளார். சம்பவ இடத்தில் நெல்லிக்குப்பம் விசாரணை நடத்தி வருகின்றனர்.