BREAKING: விசிக நிர்வாகிகள் மோதல்.. பரபரப்பு

99530பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வேட்பாளர் அறிமுகக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உட்கட்சி புருசல் காரணமாக விசிக கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அமைச்சர் கணேசன் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மேடையில் இருந்து இறக்கிவிடப்பட்ட அவர்கள் நாற்காலிக்காய் எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். போலீசார் வந்து மோதலை தடுத்து நிறுத்தினர். அப்போது மாவட்ட செயலாளரை மேடையில் சென்று அடிக்கிறீர்கள் கூட்டணி கட்சி காரி துப்பமாட்டார்களா என மற்ற நிர்வாகிகள் கேள்வியெழுப்பினர்.

தொடர்புடைய செய்தி