BREAKING: ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

79பார்த்தது
BREAKING: ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பள்ளிகள் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜுன் 4ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்து பிறகு, ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி