திருவள்ளுவர் காவி உடை - ஆளுநர் மீது வைகோ ஆவேசம்

69பார்த்தது
திருவள்ளுவர் விழாவிற்கான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது. இதற்கு மதிமுக தலைவர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று (மே 24) பேசியதாவது, “தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ரவி வந்ததில் இருந்து செய்த அக்கிரமமான செயல்களில் இதுவும் ஒன்று. திருவள்ளுவர் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு காவி உடை அணிவித்தது கண்டித்தக்கது. ஒரு வெறி பிடித்த மனிதர் ஆளுநராக இருந்துகொண்டு அநாகரிக செயலில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி