அதிகாரப்பூர்வ வாக்கு சதவீதம் - வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

76பார்த்தது
அதிகாரப்பூர்வ வாக்கு சதவீதம் - வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
வாக்கு எண்ணிக்கை விவரங்களை 48 மணிநேரத்திற்குள் அறிவிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும்படி தாக்கல் செய்யப்படும் மனுக்கள் வாக்களிப்பதை குறைக்கும் என்றும் விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் எதையும் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து, தேர்தல் நடைபெறும் தற்போதைய சூழலில் மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்றும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்காமல், கோடை விடுமுறைக்கு பின் பட்டியலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி