பாரிஸ் ஒலிம்பிக் 2024 ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது 2வது வாய்ப்பில் 89.45 மீ., வீசி 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம், 92.97 மீ., எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 மீ., வீசி வெண்கலப் பதக்கம் வென்றார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோ கோடைகால விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.