சென்னை, கோவை தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

50106பார்த்தது
சென்னை, கோவை தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பள்ளியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் தி பிஎஸ்பிபி மில்லேனியன் என்ற பள்ளியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அனைத்து வகுப்பறைகளிலும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

கடந்த வாரமும் இந்த பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.