கோவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

51பார்த்தது
கோவை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை ராமநாதபுரம் பகுதியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கோவை மாநகர காவல்துறையினர், தனியார் பள்ளியில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கோவைக்கு இன்று மாலை பிரதமர் மோடி வரும் நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.