மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் புகழேந்தி- ஸ்டாலின் இரங்கல்

50பார்த்தது
மக்களோடு மக்களாக வாழ்ந்தவர் புகழேந்தி- ஸ்டாலின் இரங்கல்
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி இன்று(ஏப்ரல் 6) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதலவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் குறிப்பில், சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தி மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, திமுகவுக்கு பேரிழப்பாகும். அவரைஇழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திமுக தோழர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி