தேர்தல் விதிகளை மீறிய இரு பெரிய கட்சிகளுக்கு நோட்டீஸ்

68பார்த்தது
தேர்தல் விதிகளை மீறிய இரு பெரிய கட்சிகளுக்கு நோட்டீஸ்
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதியோர் உதவித்தொகை உயர்த்துவது குறித்து ரங்கசாமி பேசினார். தேர்தல் நடத்தை விதிகளின்படி புதிய திட்டங்கள், சலுகைகள் உள்ளிட்டவற்றை வாக்குறுதியாக அறிவிக்க கூடாது என்பது விதி. அதனை மீறியதன் காரணமாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு தேர்தல் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டு கட்சிகளும் தங்கள் விளக்கத்தை தேர்தல் துறைக்கு அனுப்பவுள்ளன.