சூதாட்டத்தில் பணம் இழந்தவர் தற்கொலை

50பார்த்தது
சூதாட்டத்தில் பணம் இழந்தவர் தற்கொலை
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (29). சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் சுமார் ரூ.15 லட்சத்துக்கு மேல் பணத்தை இழந்ததாக தெரிகிறது.

இதனால் அவருக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டது. கடன் கொடுத்தவர்கள் தங்களது பணத்தை திருப்பி தருமாறு ஜெயராமனிடம் தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெயராமன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி