மஹாராஷ்டிராவில் தீ விபத்து - 150 கடைகள் எரிந்து நாசம்

83பார்த்தது
மஹாராஷ்டிரா, புணே அருகிலுள்ள சின்ச்வாட் பகுதியின் குடால்வாடி பகுதியில் இருந்த ஒரு பழைய பொருட்கள் பாதுகாப்பு குடோனில் இன்று(ஏப்ரல் 6) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் அக்கம்பக்கத்திலுள்ள கடைகளுக்கும் தீ மளமளவென பரவியதில் குடோன் அருகிலிருந்த 150க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாகின. சேத விவரங்கள் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர் தீ பரவலை போராடிக் கட்டுப்படுத்தியிருப்பதாகவும், 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி