விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊர்களில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, “இன்று எனது தந்தை விஜயகாந்த் மறைந்த நூறாவது நாள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஆனால், சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்குக் கூட செல்லாமல் மக்களாகிய உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன், ஆதரவு கொடுங்கள்” என்றார்.