நயன்தாராவை பார்த்து வாயைப் பிளக்கும் பாலிவுட் ரசிகர்கள்..

8458பார்த்தது
நயன்தாராவை பார்த்து வாயைப் பிளக்கும் பாலிவுட் ரசிகர்கள்..
லேடி சூப்பர் ஸ்டார் என்ற தமிழ்த் திரையுலகின் உச்சபட்ச அங்கீகாரமாக உயர்ந்து நிற்கிறார் நடிகை நயன்தாரா. இவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்துள்ளார். அந்தப்படத்தில் செம ஸ்டைலிஷாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் நயன்தாரா ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆனால், அவரது ஆரம்பகால புகைப்படங்களையும், வீடியோக்களையும் டிரெண்ட் செய்து வரும் பாலிவுட் ரசிகர்கள், இது உண்மையிலேயே ஆச்சர்யம்தான். நயன்தாரா உண்மையிலேயே வேற லெவல்தான் என வர்ணிக்கின்றனர். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையாக உச்சம் தொட்டிருக்கும் நயன்தாரா ரஜினி, அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, ஆர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி