மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக

59பார்த்தது
மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக
மாநிலங்களவையில் பாஜக பெரும்பான்மையை இழந்துள்ளது. மாநிலங்களவை நியமன எம்பிக்களான ராகேஷ் சின்ஹா, ராம் சகால், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி ஆகிய 4 பேரும் நேற்றுடன் ஓய்வு பெற்றதால், தற்போது மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 86 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், புதிய மசோதாக்களை நிறைவேற்றுவதில் பாஜகவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எந்த அணியிலும் இணையாமல் உள்ள அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங். ஆதரித்தால்தான் பாஜகவால் புதிய மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி