பாஜக தலைவர் "ஆடு" திருட்டு.. வேதனையில் புலம்பல்

79பார்த்தது
பாஜக தலைவர் "ஆடு" திருட்டு.. வேதனையில் புலம்பல்
சத்தீஸ்கரில் ரகுநாத்பூரில் உள்ள லுண்ட்ரா என்ற இடத்தில் உள்ளூர் பாஜக தலைவர் சுரேஷ் குப்தா என்பவர் ஆட்டை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். அந்த ஆடு திடீரென காணாமல் போயுள்ளது. இதுகுறித்து சுரேஷ் குப்தா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அமீர் உசேன் மற்றும் ராஜா என்ற இருவர் அந்த ஆட்டை கடத்தி சென்று கூறுபோட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இருவர் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி