திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக

52பார்த்தது
திருச்சி சூர்யாவை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக
திருச்சி S.சூர்யாவை பாஜக நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி S.சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி