பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவு

55பார்த்தது
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவு
கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவானார். பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 9 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெண்ணை தாக்கியை வழக்கில் அவர் தலைமறைவு ஆகியுள்ளார். அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி