முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்!

70462பார்த்தது
முருகனுக்கு உகந்த தைப்பூச நாளின் சிறப்புகள்!
முருகப்பெருமானின் அருளை பெற்றுத்தரும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. தைப்பூசத் திருநாளில், வேல் பூஜை செய்வதும், வேலுக்கு அபிஷேகங்கள் செய்வதும், வேலுக்கு செவ்வரளி கொண்டு அர்ச்சித்து வழிபாடுகள் மேற்கொள்வதும் உன்னதமான பலன்களைக் கொடுக்கவல்லது. இந்த நாளில், முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வதும், இல்லத்தில் முருகப்பெருமானுக்கு பூஜைகள் மேற்கொள்வதும், அருகில் உள்ள முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் தலங்களுக்கு சென்று தரிசிப்பதும் தோஷங்களையெல்லாம் போக்கக்கூடியது. குறிப்பாக, செவ்வாய் தோஷத்தைப் போக்கி அருளும். சந்தோஷத்தைப் பெருக்கித் தரும்.

தொடர்புடைய செய்தி