ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜக சார்பில் கேப்டன் யோகேஷ் பைரகி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யோகேஷ் பைரகி ஹரியானா மாநில பாஜக இளைஞர் பிரிவு துணை தலைவராகவும், ஹரியானா பாஜகவின் விளையாட்டு பிரிவின் துணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றிய அனுபவம் கொண்டவராவர்.